304 சீட்டு ஆட்டம்
தமிழர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு சீட்டு விளையாட்டு 304 சீட்டு ஆட்டம் ஆகும். கொண்டாட்டங்களில், ஒன்றுகூடல்களில், நண்பர்களிடையே இவ்விளையாட்டு விளையாடப்படுவதுண்டு. இவ்விளையாட்டுக்கு நான்கு ஆட்டக்காரர்கள் தேவை.[1]
விளையாடும் முறை
[தொகு]52 சீட்டுக்கள் கொண்ட சீட்டுக் கட்டில், ஏழுக்கு கீழ்ப்பட்ட சீட்டுக்கள் விளையாட்டில் பயன்படா, அவை வெற்றி/தோல்வி காசுக்களாக பயன்படுத்தப்படும்.அவற்றில் ஆசி பெரியது துரும்பு சொல்லும் முறை 52 சீட்டுக்களில் இருந்து முதலில் நான்கு சீட்டுகள் வழங்கப்படும் அந்த சீட்டுகளில் அதிகம் இருக்கும் சீட்டுவகை தெரிவு செய்யபடும் உ+ம் ஸ்ஸுகோப்பர் பிறகு மீதீ சீட்டுகள் வழங்கப்படும் மோத்தம் எட்டு சீட்டுகள் விளையாடுபவர் தெரிவு செய்த சீட்டே துரும்பாகும். தம் வசம் எதிராளி எரிந்த சீட்டு இல்லை என்றால் துரும்பை வீசி வெட்டி வெற்றிபெறலாம் விலையாடுபவர் தமக்கு எதிரே உள்ளவர் தமது அணியாவார் எனவே அவர் பெற்று கொள்ளும் சீட்டும் வெற்றியை தீர்மாணிக்கும் 5 சீட்டுகளை வெல்லும் அணி வெற்றி பெரும் விளையாடும் முறை விளையாடும் நால்வருக்கும் தலா ஒவ்வொருவருக்கும் எட்டு சீட்டுகள் வழங்கபட்டு விளையாட்டு ஆரம்பமாகும். விளையாடுபவர் தனக்கு விரும்பிய சீட்டை முதலில் போடலாம். தன்னிடம் எதிராளீ இட்ட சீட்டு இல்லாவிடில் வெட்டி எடுத்து கொள்ளலாம். இந்த விளையாட்டு கூகுல் Play store இல் Omi என டைப் செய்து இலவசமாக பெறலாம்.
][p]p[]
விளையாட்டு நுட்பங்கள்
[தொகு]- பிரித்தல்
- கேட்டல்
- துரும்பு
- கழித்தல்
- வெட்டுதல்
- மடக்கு
- கம்மாஸ்
- மேசை பிழை (அழி பாசு)
சீட்டு புள்ளி விபரங்கள்
[தொகு]சீட்டு | புள்ளிகள் | வேறுமுறை புள்ளியிடல் |
---|---|---|
J | 30 | 3.0 |
9 | 20 | 2.0 |
A | 11 | 1.1 |
10 | 10 | 1.0 |
K | 3 | 0.3 |
Q | 2 | 0.2 |
8 | 0 | 0 |
7 | 0 | 0 |
வெற்றி தோல்வி புள்ளி மற்றும் காசு விபரம்
[தொகு]- 304 (0.0) - கிலிக்கி கேட்டுத் தோற்றால் 8 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 6 சீட்டுக்கள்
- 304 (0.0) - மடக்கம் கேட்டுத் தோற்றால் 4 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 4 சீட்டுக்கள்
- 250 (5.5) - கேட்டுத் தோற்றால் 4 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 3 சீட்டுக்கள்
- 240 (6.5) - கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
- 230 (7.5) - கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
- 220 (8.5) - கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
- 210 (9.5) - கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
- 200 (10.5)- கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
- 90 (11.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
- 80 (12.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
- 70 (13.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
- 60 (14.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
- 50 (15.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
கலைச்சொற்கள்
[தொகு]- இசுகோப்பன் (♠)
- ஆடித்தன் (♥)
- ஊவித்தன் (♦)
- கலாவரை (♣)
- வீறு - Jack
- மணல் - 9
- ஆசு - Ace
- கேறு - K
- பெட்டை - Q
- அடுக்குதல்
- பிரித்தல்/புறித்தல்
- கேட்டல்
- கேள்வி - 50 புள்ளிகள்
- உதவி - 60 புள்ளிகள்
- மேலே - என்னால் இயலாது, கூட்டாளி கேக்கலாம்
- துரும்பு
- திறந்த துரும்பு
- அழி துரும்பு
- கழித்தல்
- வெட்டுதல்
- மடக்கு
- கம்மாசு/கம்மாறிஸ்
- மேசை பிழை (அழி பாசு)
- கோட்
- தாள்
- கடதாசி விளையட்டு
- கையாள்
- அலாப்புதல்
வெளி இணைப்புக்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rules of Card Games: Twenty-Eight". www.pagat.com. பார்க்கப்பட்ட நாள் 18 April 2016.